ஐசிசி சீவிவைத்த ஆப்பு - இந்தியாவை வென்றாலும் கொண்டாட முடியாத இங்கிலாந்து
ஸ்லோ ஓவர் ரேட் - இங்கிலாந்து அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளை ஐசிசி குறைத்துள்ளது. பரபரப்பாக நடைபெற்ற லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியது. இந்நிலையில், போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இங்கிலாந்து அணிக்கு ஐசிசி,, போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளது. மேலும், புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளையும் ஐசிசி குறைத்ததால் இங்கிலாந்து அணி 3வது இடத்திற்கு சரிந்தது.
--