ICC Test Ranking | Mohammad Siraj | ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உச்சத்துக்கு சென்ற சிராஜ்
ICC Test Ranking | Mohammad Siraj | ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உச்சத்துக்கு சென்ற சிராஜ்
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் சிறந்த இடங்களைப் பிடித்துள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த தொடரில், 23 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் 12 இடங்கள் முன்னேறி 15வது இடத்தைப் பிடித்தார். இந்தியா வெற்றியை தீர்மானிக்கும் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பிரசித், 25 இடங்கள் முன்னேறி 59வது இடத்தைப் பிடித்தார்.