Hockey | தமிழகத்தில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் - இன்று இந்தியா vs சிலி
தமிழகத்தில் 14வது ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் தொடங்கி உள்ளது. தொடரில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் மதுரையில் போட்டிகள் நடைபெறுகின்றன. கேப்டன் ரோகித் தலைமையில் களமிறங்கும் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆக முன்னாள் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. சென்னையில் இரவு 8.30 மணிக்கு இந்தியா தங்கள் முதல் லீக் போட்டியில் சிலியை எதிர்கொள்கிறது.