2 ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன்...
5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற லீடர்...
ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர்...
ஒரே உலகக்கோப்பையில் அதிக சதங்களை விளாசிய வீரர்....
இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரோகித் சர்மா பிறந்தநாள் கொண்டாட, அவரை வாழ்த்தி கொண்டாடி தீர்த்திருக்கு பெருங்கூட்டம்.
ரோகித் கூட விளையாடிய பிளேயர்ஸ், கரெண்ட் இந்தியன் டீம் பிளேயர்ஸ், ஜூனியர் கிரிக்கெட்டர்ஸ், கோடிக்கணக்கான ஃபேன்ஸ் எல்லாம் ரோகித்தை வாழ்த்தி, ஸ்பெஷல் எடிட்ல போட்டோஸ், வீடியோவ ஷேர் பண்ணி மகிழ்ந்திருக்காங்க..
மும்பை டீம் மேட்ஸோட சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்காரு ஹிட்மேன்..
அப்படியெ கட் பண்ணா, விம்பிள்டன், FIFAநு வெவ்வேறு விளையாட்டோட பெரும் அமைப்புகளும் ரோகித்தை புகழ்ந்திருக்கு.
லீடரா இந்தியாவுக்கு 2 ஐசிசி கோப்பைகளை வாங்கிக் கொடுத்த ரோகித், அவரோட ரொம்ப வருச ஆசையான 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லனும், தொடர்ந்து பேட்டிங்ல கலக்கனும்னு பலர் ரோகித்தை வாழ்த்திட்டு வராங்க...
இந்த நேரத்துல ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்ல சொதப்புனாலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ரோகித் கேப்டனா போவார்னு தகவல் போயிட்டு இருக்கு.