இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் அரை சதம் விளாசியதன் மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக 50+ ரன்களை எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனையை ரிஷப் பந்த் படைத்து, தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். முதல் நாள் போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறிய ரிஷப் பந்த், இரண்டாவது நாளில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் "மன உறுதி என்பது வலியை கடந்து விளையாடி , அதைத் தாண்டி எழுவது" என குறிப்பிட்டு ரிஷப் பந்திற்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.