Ind Vs Eng | Test Cricket | Shubman Gill | தோல்வியுடன் தொடங்கிய கில் கேப்டன்சி
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில், இந்தியா 471 ரன்களையும், இங்கிலாந்து 465 ரன்களையும் எடுத்தன. பின்னர், 6 ரன்கள் மட்டுமே முன்னிலை என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்டின் சதத்தால், 364 ரன்களை எடுத்தது. 371 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 4ஆவது நாளில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 தொடர்கள் கொண்ட போட்டியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் 62 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 149 ரன்களையும் குவித்து வெற்றிக்கு வித்திட்ட பென் டெகெட் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.