Gautam Gambhir Dressing Room Advise | | ``யார் வந்தாலும் போனாலும்''.. கம்பீர் சொன்ன முக்கிய அட்வைஸ்

Update: 2025-08-06 03:34 GMT

Gautam Gambhir Dressing Room Advise | | ``யார் வந்தாலும் போனாலும்''.. வீரர்களுக்கு கம்பீர் சொன்ன முக்கிய அட்வைஸ்


அணிக்கு வீரர்கள் யார் வந்தாலும் சென்றாலும் டிரெஸிங் ரூமின் (dressin room) கலாசாரம் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். ஓவல் வெற்றிக்குப் பிறகு வீரர்கள் மத்தியில் பேசிய அவர், நாம் தொடர்ந்து கடினமாக செயல்பட வேண்டும் என்றும், தொடர்ந்து எல்லா துறைகளையும் மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இப்படி செயல்பட்டால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலத்திற்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் கம்பீர் தெரிவித்தார்.

நம்ம தொடர்ந்து கடினமா செயல்படனும், தொடர்ந்து எல்லா ஏரியாவயும் இம்ப்ரூவ் பண்ணனும் அப்படி பன்ணாதான் டெஸ்ட் கிரிக்கெட்டுல நீண்ட நாளைக்கு ஆதிக்கம் செலுத்த முடியும்... டீம்க்கு பிளேயர்ஸ் வருவாங்க... போவாங்க... ஆனா டிரெஸிங் ரூமோட கல்ச்சர் எப்பயும் சிறப்பா இருக்கனும்....

Tags:    

மேலும் செய்திகள்