TNPL 2025 | கோவை அணிக்கு முதல் வெற்றி - சொந்த மண்ணில் 98 ரன்னில் சுருண்ட நெல்லை

Update: 2025-06-22 05:24 GMT

டிஎன்பிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில்

நெல்லை அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வீழ்த்தியது. நெல்லையில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய கோவை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணி, 17 புள்ளி 5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 67 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்