முதல் T20 - இங்கிலாந்து அணியின் 11 வீரர்கள் யார்? யார்? | England | Cricket | Thanthi TV
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 11 வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து அணி வெளியிட்டுள்ளது. தொடக்க வீரர்களாக பில் சால்ட்(PHILL SALT), பென் டக்கட்(BEN DUCKETT) களமிறங்கும் நிலையில், 3வது வீரராக கேப்டன் பட்லர், மிடில் ஆர்டரில் ஹாரி ப்ரூக்(HARRY BROOK), லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தல் பேட் செய்ய உள்ளனர். ஆல்ரவுண்டராக ஜேமி ஓவர்டனும், பந்துவீச்சாளர்களாக அட்கின்சன், ஆர்ச்சர், ரஷீத், மார்க் உட் (MARK WOOD) ஆகியோரும் களமிறங்குகின்றனர். முதல் ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.