ENG vs SA | தென் ஆப்பிரிக்கா ஆடிய தரமான ஆட்டம் - சமாளிக்க முடியாமல் தோற்ற இங்கிலாந்து
ENG vs SA | தென் ஆப்பிரிக்கா ஆடிய தரமான ஆட்டம் - சமாளிக்க முடியாமல் தோற்ற இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில் , இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களை குவித்தது. பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களை எடுத்து 5 ரன்களில் தோல்வியை தழுவியது. 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது போட்டியை வென்றதன் மூலம் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.