கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் தோனிக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டது.... சுனில் நரைன் ஓவரில் எல்.பி.டபிள்யூ (LBW) முறையில் தோனிக்கு கள நடுவர் அவுட் கொடுத்தார். இதனை எதிர்த்து தோனி ரிவியூ (REVIEW) செய்தார். அப்போது, பேட்டில் பந்து பட்டதை உணர்த்தும் விதமாக அல்ட்ரா எட்ஜ்ஜில் (ULTRA EDGE) லேசான மாறுபாடு தெரிந்தபோதும், மூன்றாம் நடுவர் தோனிக்கு அவுட் கொடுத்தார். தோனிக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டதை, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.