Delhi | தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி - பட்டம் வென்றார் தமிழக வீரர்

Update: 2025-10-05 02:15 GMT

டெல்லியில் நடைபெற்ற 30வது தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேந்த மணீஷ் சுரேஷ்குமார் பட்டம் வென்று அசத்தினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மணீஷ் சுரேஷ்குமார், 6-4, 6-2 என்ற செட்கள் கணக்கில், கீர்த்திவாசனை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இதே போன்று, பெண்கள் ஒற்றையர் பிரிவில் 6-1, 6-2 என்ற செட்கள் கணக்கில் ஆகாங்க்ஷா நிட்டூரே என்பவரை வீழ்த்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த வைஷ்ணவி பட்டம் வென்றார். பட்டம் வென்ற மணீஷ் சுரேஷ்குமார் மற்றும் வைஷ்ணவிக்கு கோப்பை, 3 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதேபோன்று மற்ற வீர‌ர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்