சிஎஸ்கே தொடர் தோல்வி - கடும் கோபத்தில் ரெய்னா விமர்சனம்

Update: 2025-04-22 02:21 GMT

பேட்டிங், பீல்டிங், பவுலிங்னு மேட்ச்சுக்கு மேட்ச் மோசமா விளையாடி தோத்து கடைசி இடத்துல தத்தளிச்சிட்டு இருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்...

டீமோட செயல்பாட்டை பார்த்து கடுப்பான முன்னாள் சிஎஸ்கே ஸ்டார் பேட்டர் சுரேஷ் ரெய்னா, ஏலத்துல நட்சத்திர இளம் பிளேயர்ஸ்-ஆ எடுக்காம விட்டது மட்டுமில்லாம, ராகுல், பண்ட், ஸ்ரேயஸ் போன்ற ஸ்டார் பிளேயர எடுக்காம டீம் மேனேஜ்மென்ட் சொதப்பிடுச்சினு விமர்சிச்சிட்டாரு.

பயிற்சியாளர் உட்பட அணி நிர்வாகம் சரியான வீரரை தேர்ந்தெடுக்கலனு ரெய்னா கடுப்பாயிட்டாரு.

இதுமட்டுமில்ல, சிஎஸ்கேவோட மோசமான ஆட்டம் டிக்கெட் புக்கிங்லயும் எதிரொலிச்சிடுச்சி. எப்பயும் டிக்கெட் ஓபன் பண்ணா ஒரு லட்சம் பேர் வெயிட்டிங்ல காமிக்கும். ஆனா ஐதராபாத்துக்கு எதிரா வெள்ளிக்கிழமை சேப்பாக்கத்துல நடக்குற போட்டியில வெரும் 50 ஆயிரம் பேர்தான் வெயிட்டிங்னு காமிச்சது.

15 நிமிசத்துக்குள்ள ஹவுஸ் புல் ஆகுற நிலை போயி, 2 மணி நேரம் ஆகியும் டிக்கெட் விற்காத நிலை இருந்ததாவும் சொல்லப்பட்டுச்சி...

Tags:    

மேலும் செய்திகள்