மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே - ரசிகர்கள் விரக்தி

Update: 2025-04-06 02:11 GMT

சேப்பாக்ல நடந்த போட்டியில முதல்ல பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்ல 183 ரன் அடிச்சது.கே.எல். ராகுலோட அரைசதமும், அபிஷேக் போரல், கேப்டன் அக்‌ஷர் படேல், ஸ்டப்ஸ் பேட்டிங் அந்த டீமுக்கு பக்கபலமா இருந்தது.

ரொம்ப வருசமா 180 ரன்களுக்கு மேல சேஸ் செய்யாம இருக்குறதை முறியடிக்கலாம்னு களமிறங்குன சென்னை டீம்க்கு இந்த முறையும் தொடக்கம் ஏமாற்றம்தான். ரச்சின் 3, கெய்க்வாட் 5, ரொம்ப எதிர்பார்ப்போட களமிறங்குன கான்வே 13 ரன் என ஆரம்பமே ஏமாற்றம்தான்...

ஓப்பனிங்தான் இப்படினா, மிடில் ஓவர் அதுக்குமேல சறுக்கல். விஜய் சங்கர், தோனி பெரிய ஷாட் அடிக்க முடியாம திணற, இந்த முறையும் சிஎஸ்கேவிற்கு மோசமான தோல்வி... நடப்பு ஐபிஎல்ல ஹாட்ரிக் தோல்வியோட தத்தளிக்குது சிஎஸ்கே...

சேப்பாக்ல ஆர்சிபிகிட்ட 17 வருசத்துக்கப்புறம் முதன்முறையா தோத்த சிஎஸ்கே, இப்ப டெல்லிகூட 15 வருசத்துக்கு அப்புறம் தோத்துறுச்சி.. சொந்த மண்ணுலயே சிஎஸ்கே திணறுது...

Tags:    

மேலும் செய்திகள்