சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியால் 10 ஓவர்கள் களத்தில் பேட்டிங் செய்ய முடியாது என தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் Stephen Fleming கூறியுள்ளார். தோனி மிடில் ஆர்டரில் களமிறங்காதது ஏன் என விளக்கம் அளித்த ஃபிளமிங், தோனியின் உடல் வலிமை முன்புபோல் இல்லை என்றும், முடிந்த அளவு தோனி அணிக்கு பங்களித்து வருவதாகவும் கூறினார். ஆட்டத்தின் சமநிலையைப் பொறுத்து முன்கூட்டியோ அல்லது பின்வரிசையிலோ தோனி களமிறங்குவதாகவும் ஃபிளமிங் தெரிவித்தார்.