இந்தியா - பாக். போட்டியை நேரில் கண்டு களித்த பிரபலங்கள்

Update: 2025-02-24 05:29 GMT

துபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை, பல்வேறு முக்கிய பிரபலங்கள் கண்டு களித்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்கள் திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா ஆகியோருடன் நடிகர் சிரஞ்சீவி கண்டு களித்தார். இதேபோல் நடிகர் ஜீவா, நடிகை சோனம் கபூர், இயக்குனர்கள் வெங்கட்பிரபு, சுகுமார், கிரிக்கெட் வீரர்கள் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஷாகித் அஃப்ரிடி உள்ளிட்ட பலரும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் பார்த்து ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்