Cincinnati Open Tennis 2025 | Novak Djokovic | சின்சினாட்டி ஓபன் - நட்சத்திர வீரர் ஜோகோவிச் விலகல்

Update: 2025-08-06 02:17 GMT

Cincinnati Open Tennis 2025 | Novak Djokovic | சின்சினாட்டி ஓபன் - நட்சத்திர வீரர் ஜோகோவிச் விலகல்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் விலகி உள்ளார். ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இந்த மாதம் 24ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு பயிற்சியில் ஈடுபடும் விதமாக சின்சினாட்டி ஓபன் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் வருகிற 9ம் தேதி தொடங்க உள்ளன. இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக சின்சினாட்டி ஓபன் தொடரில் இருந்து ஜோகோவிச் விலகியுள்ளார். இந்த தொடரில் பங்கேற்காமல் நேரடியாக அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் களமிறங்கவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்