மீண்டும் களமிறங்கும் `தி யுனிவர்ஸ் பாஸ்' - அடிச்சா சிக்ஸ் தான்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
The International Masters League டி20 தொடரில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் (Chris Gayle) மீண்டும் களமிறங்கவுள்ளார். ஓய்வுபெற்ற முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் IML டி20 தொடர், வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் சச்சின், யுவராஜ், லாரா, காலிஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் The Universe Boss என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கவுள்ளது, கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.