Chris Gayle | ``என்னை அவமானப்படுத்திய IPL அணி.. நொறுங்கி அழுதுட்டேன்'' - பகீர் கிளப்பிய கிறிஸ் கெயில்
பஞ்சாப் கிங்ஸ் அணி தம்மை அவமானப்படுத்தியதால் மனமுடைந்து ஐபிஎல்லில் இருந்து தாம் ஓய்வு பெற்றதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் ஆர்சிபி அணி சார்பில் களமிறங்கி பல வானவேடிக்கைகள் நிகழ்த்தியதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டவராக வலம் வந்த அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், 2018 முதல் 2021 வரை பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இந்த நிலையில், அந்த சமயத்தில் தாம் பஞ்சாப் அணியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும், தம்மை சிறு குழந்தை போல் மரியாதையின்றி நடத்தியதாகவும் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். இதனால் மன அழுத்தத்திற்கு தாம் ஆளானதாகவும், ஒரு கட்டத்தில் அப்போது பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அணில் கும்ப்ளேவை அழைத்து பேசிய போது தாம் நொறுங்கி அழுததாகவும் அவர் கூறியுள்ளார்.