உலக செஸ் அரங்கில் இந்தியா தான் 'கிங்'.. அன்று குகேஷ், இன்று கொனேரு ஹம்பி - குவியும் வாழ்த்துக்கள்..!

Update: 2024-12-29 13:10 GMT

அமெரிக்காவில் நடைபெற்ற உலக rapid செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 11வது மற்றும் கடைசி சுற்றுப் போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை கரிஸ்மா சுகந்தரை கொனேரு ஹம்பி வென்றார். 11 சுற்றுகளின் முடிவில் எட்டு புள்ளி ஐந்து புள்ளிகள் பெற்ற கொனேரு ஹம்பி, முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டிலும் கொனேரு ஹம்பி rapid செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது நினைவுகூரத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்