FIFA கால்பந்தால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் - இந்த இடங்களில் செல்பவர்கள் கவனிங்க..

Update: 2025-03-30 04:17 GMT

சென்னையில் இன்று(Mar 30) FIFA கால்பந்து போட்டி நடைபெற உள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்தியா மற்றும் பிரேசில் அணிகள் மோதும் நிலையில், மதியம் 3 மணி முதல் இரவு வரை போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராஜா முத்தையா சாலையில் மாநகர பேருந்துகள் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது சூளை ரவுண்டானாவிலிருந்து நேரு விளையாட்டு மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல், ஜெர்மியா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து நேரு ஸ்டேடியம் நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்