Chengalpattu | Elephantine Circuit அமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி

Update: 2025-11-17 19:10 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூரில் “சமூக உடற்தகுதி விழிப்புணர்வு“ என்ற கருப்பொருளில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. எலிஃபேண்டைன் சர்க்யூட் (Elephantine Circuit) என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் பிராண்ட் அம்பாசிடரான நடிகர் மிலிந்த் சோமன், மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சக போட்டியாளர்களை ஊக்குவித்தார். இதேபோன்று, மாதந்தோறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை இந்த எலிஃபேண்டைன் சர்க்யூட் (Elephantine Circuit) நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்