"நான் ‘கில்’லி டா".. சதம் விளாசிய கில் - நொந்துபோன பங்களா பாய்ஸ்.. இந்தியா அசத்தல் வெற்றி
துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. எனினும் 6வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹ்ரிதாய் (Towhid Hridoy) - ஜேக்கர் அலி இணை சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. 68 ரன்களில் ஜேக்கர் அலி ஆட்டமிழக்க, தசைப்பிடிப்புடன் கடைசிவரை போராடிய ஹ்ரிதாய் Hridoy சதம் அடித்தார். கடைசி ஓவரில் 228 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழந்தது. இந்திய பவுலர் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து 229 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் இணை சிறப்பான தொடக்கம் தந்தது. ரோகித் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கோலி 22 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடினார். அக்சர் படேல் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும் சுப்மன் கில் - கே.எல்.ராகுல் இணை இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. சுப்மன் கில் சதமடித்து அசத்தினார். கே.எல்.ராகுல் 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 47வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்த இந்தியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.