சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களைக் கடந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வரலாறு படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 14 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை கோலி தொட்டார். 287 இன்னிங்ஸ்களில் 14 ஆயிரம் ரன்களை கோலி கடந்துள்ளார்.
முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்களில் 14 ஆயிரம் ரன்களை கடந்தது சாதனையாக இருந்த நிலையில் சச்சின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.