சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில்,, குரூப் ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 4 புள்ளிகளுடன் ரன்-ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. தொடரில் இருந்து வெளியேறிய வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
குரூப் பி பிரிவில் 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. வெற்றிக் கணக்கைத் தொடங்காத இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன.