ஆஸ்திரேலிய உள்நாட்டு தொடர்கள்ல அற்புதமா விளையாடி கவனம் பெற்றவருதான் இந்த வில் புக்கோவ்ஸ்கி... ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிலயும் விளையாண்டு, அறிமுக போட்டிலயே இந்தியாவிற்கு எதிரா அரைசதமும் இவரு அடிச்சுருக்காரு...
ஆனா இவருக்கு பந்து தலையில பட்டு காயம் அடையுறதும், அதனால concussion ஆகுறதும் தொடர் கதையா இருந்துச்சு... இந்த சோகம் அடிக்கடி களத்துல அவர துரத்திக்கிட்டே இருந்துச்சு...
ஒரு கட்டத்துல மருத்துவர்கள், திரும்ப தலைல பந்து பட்டா உங்க உயிருக்கே ஆபத்து ஏற்படும்னு புக்கோவ்ஸ்கிய எச்சரிச்சாங்க... இந்த சூழல்லதான் கிரிக்கெட்லேந்து ஓய்வு பெறுறன்னு கனத்த இதயத்தோட அறிவிச்சு இருக்காரு புக்கோவ்ஸ்கி..... ப்ச்ச்ச்ச்ச்.... கொடுமைல....