ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - தமிழக வீராங்கனைகள் அசத்தல்

Update: 2025-06-01 02:07 GMT

Asia Athlete Championship | ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - தமிழக வீராங்கனைகள் அசத்தல்

தென்கொரியாவுல நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்ல 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்துல இந்தியா சார்புல தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் கலந்துகிட்டாங்க.

இதுல, 56.46 விநாடியில மூன்றாவதா இலக்கை எட்டி வெண்கலம் வென்று அசத்துனாங்க..

கணுக்கால் காயத்தால அவதிப்பட்டாலும், தீரத்தோட ஓடி நாட்டிற்கு பதக்கம் வென்று பெருமைப்படுத்தியிருக்காங்க வித்யா..

இதே மாதிரி மகளிர் 100 மீட்டர் RELAYல இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்துச்சி..

43.86 விநாடிகள்ல இரண்டாவது அணியா இலக்கை எட்டி இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்று அசத்துனாங்க..

ஒருகட்டத்துல இந்தியா பின் தங்கிடுமோனு அச்சம் இருந்தப்ப, மூனாவதா ஓடுன தமிழ்நாட்டைச் சேர்ந்த அபிநயா ராஜராஜன் அபாரமா ஓடி முன்னிலை பெற்றாங்க.. இறுதியா இந்தியா 2வது இடம்பிடிச்சி அசத்திடுச்சி...

Tags:    

மேலும் செய்திகள்