இந்தியாவிலேயே மிகப்பெரியதாக உருவாகும் கிரிக்கெட் ஸ்டேடியம் - எங்கு தெரியுமா?

Update: 2025-01-28 07:26 GMT

ஆந்திராவில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதற்கு, ஆந்திர கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆந்திர கிரிக்கெட் சங்க தலைவர் கேசினேனி சிவநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமராவதியில் இருநூறு ஏக்கர் பரப்பளவில், எண்ணூறு கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தை விட இது பெரிய மைதானமாக இருக்கும் என்றும், 2029-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுதவிர ஐபிஎல் தொடருக்காக விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்