RCB முதல் கப்பை வென்றதும் `5 கப்’ வைத்திருக்கும் CSK, MI சொன்ன வார்த்தைகள்
ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்ற பெங்களூருவிற்கு ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக பெங்களூரு வென்ற நிலையில், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதேபோல் மும்பை அணியும் பெங்களூருவிற்கு வாழ்த்து கூறியுள்ளது.