Divorce ``மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது'' கோர்ட்டுக்கு சென்ற முகமத் ஷமியின் முன்னாள் மனைவி..
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியிடம் விவாகரத்து பெற்ற அவரது மனைவி மாதம் தோறும் தமக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பராமரிப்பு தொகையான நான்கு லட்சத்தை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாதாந்திர பராமரிப்பு தொகையான நான்கு லட்சம் ரூபாயே அதிகம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் , இது தொடர்பான வழக்கில் நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க முகமது ஷமி மற்றும் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது