இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஐரோப்பிய நாடான இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. ஐரோப்பிய அணிகள் பிரிவில் நடந்த தகுதிச் சுற்றில் ஜோ பர்ன்ஸ் joe burns தலைமையிலான இத்தாலி அணி 5 புள்ளிகள் பெற்றது. இதன்மூலம் 20 அணிகள் அடுத்த ஆண்டு பங்கேற்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு இத்தாலி தகுதி பெற்று இருக்கிறது. ஐரோப்பிய பிரிவில் மற்றொரு அணியாக நெதர்லாந்தும் தகுதி பெற்ற நிலையில், ஸ்காட்லாந்து தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.