கூகுள் மேப்பை நம்பி குளத்திற்குள் காரை விட்ட சம்பவம் - உ.பி.யில் அதிர்ச்சி

Update: 2025-08-22 11:03 GMT

உத்தரப் பிரதேச மாநிலம் சாஹரன்பூர் பகுதியில் கூகுள் மேப்பை நம்பி சென்ற மாணவர்களின் கார் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தி அம்பாலாவில் உள்ள மார்க்கண்டேஸ்வரர் ஆலயத்திற்கு காரில் சென்றுள்ளனர். அப்போது தவறான திசையில் சென்ற கார் குளத்தில் விழுந்தது. இதையடுத்து மாணவர்கள் கார் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினர்.பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் குளத்தில் விழுந்த கார் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்