புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு பதிவு செய்வதற்கு வட்டார வழங்கல் அலுவலர் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டார வழங்கல் அலுவலர் பாலமுருகன், ரேஷன் கார்டு பதிவு செய்ய பொதுமக்களிடம் 200 முதல் 1000 ரூபாய் வரை தர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். இவ்வாறு வாங்கும் பணத்திற்கு ரசீது தர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.