TVK Vijay | CBI | Delhi | விஜய்யிடம் முடித்த CBI.. நீலாங்கரை வீட்டில் நின்ற கார்..

Update: 2026-01-20 03:02 GMT

கரூர் துயர சம்பவம் தொடர்பாக, டெல்லியில் சிபிஐ விசாரணையை முடித்துக் கொண்டு, தவெக தலைவர் விஜய் நேற்றிரவே சென்னை திரும்பினார்.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, விஜய் பங்கேற்ற பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கடந்த 12ம் தேதி விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் சி.பி.ஐ. அலுவலகத்தில் அவர் நேற்று மீண்டும் ஆஜரானார். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு தனி விமானத்தில் சென்னை வந்த விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டை சென்றடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்