அமெரிக்க வரிவிதிப்பால் இந்திய தோல் நிறுவனங்கள் பாதிப்பு
அமெரிக்க வரி விதிப்பால் நடப்பு ஆண்டில் இந்திய தோல் துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் கூடுதல் வரிவிதிப்பால் இந்திய தோல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறையின் வருவாய் பத்து முதல் 12 சதவீதம் வரை குறையும் என்றும் ஏற்றுமதி அளவு 14 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும் கிரிசல் மதிப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவிற்கு காலணிகள் போன்ற லெதர் பொருட்களே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இருப்பினும் உள்நாட்டு சந்தையில் தோல் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மிதமான முன்னேற்றத்துடன் இந்த சரிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.