எடப்பாடி பழனிசாமியின் உள்ளம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்காது என, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார். பின்னர் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி கூட்டணியில் இணைய வைக்கலாம், ஆனால் அவரது உள்ளம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார்.