முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்கள் தமிழகம் வந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பெங்களூரு நீதிமன்ற கருவூலத்தில் இருந்த ஜெயலலிதாவின் ஆபரணங்கள், சொத்துகள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.