திடீர் வீடியோ வெளியிட்ட ஆர்.பி.உதயகுமார்

Update: 2025-05-27 03:13 GMT

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் (Z) ப்ளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பதைபதைப்பையும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். இது முதல் முறை அல்ல, ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதால், எடப்பாடி பழனிசாமிக்கு இசட் (Z) பிளஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்