மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

Update: 2025-07-10 02:57 GMT

மதுரை மாநகராட்சியில் நிதி முறைகேடு புகாரில் சிக்கிய மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், குழுத் தலைவர்கள் ஆகியோரின் ராஜினாமாவை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் ஏற்றுக் கொண்டார்.

மதுரை மாநகராட்சியில் உள்ள தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்து வரி குறைவாக நிர்ணயித்து பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு விசாரணை நடத்தியதை அடுத்து, அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மண்டல தலைவர்களான பாண்டிசெல்வி, சரவண புவனேஸ்வரி, சுவிதா, முகேஷ் சர்மா, வாசுகி மற்றும் நகரமைப்பு வரி விதிப்பு குழு தலைவர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமி கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை ஆணையர் சித்ரா விஜயன் ஏற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்