முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

Update: 2025-07-10 03:39 GMT

இனி தமிழ்நாட்டில் மாணவர்களின் விடுதிகள் “சமூகநீதி விடுதிகள்“ என அழைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதனால் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படப் போவதில்லை என அறிக்கை மூலம் விமர்சித்துள்ளார். மாணவர்களிடையே மதுப்பழக்கம், போதைப் பழக்கம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டி உள்ள ராமதாஸ், அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அதுவும் 'சமூக நீதியின் ஓர் அடையாளம்' என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்