``திமுக அரசின் எந்த திட்டத்திற்கும் பலனில்லை'' -காங்கிரஸ் Ex MLA கருத்தால் பரபரப்பு

Update: 2025-07-19 05:32 GMT

   ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கேஏ. மனோகரன், மக்களை தேடி, மக்களுடன் ஓடி, மக்களுடன் விளையாடி என தமிழக முதல்வரின் எந்த திட்டங்களுக்கும் எந்தவிதமான பலனும் இல்லை என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ஓசூர் ராமநாயக்கன் ஏரியை அழகுப்படுத்த மாநகராட்சி உலக வங்கியில் 34 கோடி கடன் வாங்கி உள்ள நிலையில், ஏரியை சென்று பார்த்தால் தெரியும், பணிகள் எப்படி நடகிறது என பேசினார். அதேபோல ஓசூர் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது, அதற்கு எந்தவிதமான மாற்று வழியும் செய்யவில்லை எனவும் கூறினார். மேலும் இவை அனைத்தும் தமிழக முதல்வர் கவனத்திற்கு செல்கிறதா என கேள்வி எழுப்பினார். முதல்வர் அதிகாரிகளின் பேச்சை கேட்டு நடந்தால் மக்களிடையே மதிப்பு குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்