Bihar CM | Nitish Kumar | பீகார் முதல்வராக 10வது முறையாக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்

Update: 2025-11-20 02:41 GMT

பீகார் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் இன்று மீண்டும் பதவியேற்கிறார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் சட்டப் பேரவைக் குழு தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற அக்கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழு கூட்டத்தில், நிதிஷ் குமாரை பேரவைக் குழு தலைவராக எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். இதேபோல பாஜக சட்டப் பேரவைக் குழு தலைவராக தற்போதைய துணை முதலமைச்சர் சாம்ராட் செளத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்