ADMK-BJP Alliance | ``தனிச்சின்னத்தில் போட்டி..’’ - NDAல் உள்ள கட்சி அறிவிப்பால் பரபரப்பு திருப்பம்

Update: 2026-01-22 03:31 GMT

பாரிவேந்தருடன் பியூஷ் கோயல் சந்திப்பு- என்டிஏ மாநாட்டிற்கு அழைப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நாளை (23ம் தேதி) நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாட்டில் பங்கேற்குமாறு ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாரிவேந்தர், வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் சூழல் உள்ளதால் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என்று தெரிவித்தார். இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும், அதிமுக அறிவித்துள்ள இலவச அறிவிப்புகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்