Bihar | NitishKumar | Bjp | 20 ஆண்டுகளில் இதுவரை எடுக்காத புதிய முடிவெடுத்த நிதிஷ் குமார்
தனது 20 ஆண்டுகால ஆட்சியில், தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த உள்துறை அமைச்சகத்தை, முதல் முறையாக பாஜகவிடம் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒப்படைத்துள்ளார். அதன்படி உள்துறை அமைச்சராக பாஜகவைச் சேர்ந்த துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி பொறுப்பு வகிக்க உள்ளார். பீகார் முதலமைச்சராக பத்தாவது முறை பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்தில், 26 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பாஜகவிற்கு 14 அமைச்சர் பதவியும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 8 அமைச்சர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 18 அமைச்சர்களுக்கான இலாகாக்களை நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.