Udhayanidhi Stalin | ``புதுசா வந்து ஷோ காட்டலாம் ஆனா காத்தடிச்சா பறந்துடும்..’’ - துணை முதல்வர்..
அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் ஷோ காட்டலாம், ஆனால் அவர்கள் காற்றடித்தால் பறந்துவிடுவார்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பாக, கழக நிர்வாகிகள் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பேசிய துணை முதல்வர், பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணிய நாங்கள் அண்ணா திமுக இல்லை, அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக என்று தெரிவித்தார்.