Nainarnagendiran | BJP | Karaikudi | காரைக்குடியில் கால் வைத்ததும் டன் கணக்கில் இறங்கிய மாலை..

Update: 2025-10-14 07:19 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை சார்பில், ஒரு டன் எடையுள்ள பிரம்மாண்ட மாலை கிரேன் மூலம் அணிவிக்கப்பட்டடு, கரகாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தானே மாட்டு வண்டியை ஓட்டி சென்று பிரச்சார வாகனத்தில் ஏறினார். பின்னர் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்பட்டு விட்டதாகவும், காரைக்குடி நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி வரவேற்க மாவட்டத் தலைவர் அனுமதி கேட்டும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்றும், இது குறித்து உயரதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் திமுக ஆட்சியை நம்பி போலீஸ் அதிகாரிகள் தங்களது செயல்பாட்டை குறைத்து கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர் திராவிட மாடல் ஆட்சிக்கு இன்னும் 176 நாட்கள் தான் உள்ளதாகவும், தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்