Kovai Student Issue | L Murugan | DMK vs BJP | கோவை சம்பவத்தில் L முருகன் கொதிப்பு

Update: 2025-11-05 03:03 GMT

கோவை மாணவி பலாத்கார சம்பவத்தில் எல்.முருகன் ஆவேச கருத்து

கோவை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். குற்றவாளிகளை கைது செய்ததை சாதனையாகக் கூறுவது வெட்கக்கேடானது என்றும், குற்றங்களைத் தடுப்பதே அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்தார். கோவை விமான நிலையம் அருகே நடந்த கொடூரம் தமிழக காவல்துறையின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என்றும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மதுபானம், போதைப்பொருள் அதிகரிப்பால் குற்றங்கள் பெருகி வருவதாகவும், ஆட்சிக்காலம் முடிவதற்கு முன் முதலமைச்சர் விழித்துக் கொள்ள வேண்டும் எனவும் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்