Regupathy | EPS | முதல்வருக்கு Open challenge விடுத்த ஈபிஎஸ் - கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரகுபதி
சட்ட மன்றத்தில் முதலமைச்சர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வெளிநடப்பு செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு Open challenge என்ற சவால் தேவையா என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் Open challenge விடுத்திருந்த நிலையில், முதல்வருடன் நேருக்கு நேர் மேடையேறி பதில் அளிக்கத் தயார் என்று எடப்பாடி பழனிசாமியும் சவால் விடுத்துள்ளார்.
இதை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் ரகுபதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானது அதிமுக ஆட்சியில் என்றாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்துவைத்தது முதலமைச்சர் ஸ்டாலின்தான் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சி பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயார் என்று கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு எதற்கு மேடை போட வேண்டும், சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் பேசலாமே என்றும் ரகுபதி விமர்சித்தார்.