EPS | AIADMK | "தோல்வி பயத்தில் இத பண்ணிருக்காரு.." - மேடையில் கொதித்து பேசிய EPS
மாணவர்களுக்கு நான்காண்டு காலம் மடிக்கணினி வழங்காமல் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின், தோல்வி பயத்தால் தற்போது மடிக்கணினி வழங்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ள வாழவந்தான் குப்பத்தில் அதிமுக சார்பில் மகளிர் அணி எழுச்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் பட்டியலின மக்களுக்கு சொந்தமாக இடம் வாங்கி கொடுத்து கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றும், தாலிங்கு தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். தீபாவளி பண்டிகைக்கு பெண்களுக்கு பட்டு சேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.