தமிழக MP, MLAக்களின் ஊழல் வழக்கு விவரம் - ஐகோர்ட் போய் சாதித்த தவெக

Update: 2025-07-19 02:45 GMT

தமிழகத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மண்டல வழக்கறிஞர் ஆதித்ய சோழன், முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்கக்கோரி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மனு அளித்து இருந்தார். மேலும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் தகவல்கள் வழங்கப்படாததால் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, விவரங்களை வழங்க, 12 வாரங்களில் முடிவெடுக்க மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்